மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் படுகாயம்
சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே கீழ கருங்கடலைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 65). இவர் சைக்கிளில் ஊர் ஊராக சென்று சம்சா வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் சாத்தான்குளம் விஜயராமபுரத்தில் வியாபாரத்துக்கு சென்று விட்டு, சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அங்குள்ள தண்ணீர் கம்பெனி அருகில் சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சைக்கிளின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுடலைமுத்துவை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.