முதியவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை

2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-10-31 18:45 GMT

ஊட்டி, 

நீலகிரி மாவட்டம் சேரம்பாடி பகுதியை சேர்ந்தவர் திராவிடமணி (வயது 60). விவசாயி. கடந்த 2019-ம் ஆண்டு அவர் 9 மற்றும் 12 வயதான 2 சிறுவர்களுக்கு இனிப்பு வாங்கி தருவதாக கூறி பாக்கு தோட்டத்திற்கு அழைத்து சென்று உள்ளார். அங்கு வைத்து 2 சிறுவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திராவிடமணியை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டது. 2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திராவிடமணிக்கு 8 ஆண் சிறை தண்டனை மற்றும் ரூ.8,000 அபராதம் விதித்து நீதிபதி நாராயணன் தீர்ப்பளித்தார். இதைதொடர்ந்து போலீசார் திராவிடமணியை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.


Tags:    

மேலும் செய்திகள்