முதியவர் மாயம்

முதியவர் மாயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது

Update: 2022-09-25 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த மருதூா் தெற்கு சேத்தி கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 72). உடல்நலக்குறைவு காரணமாக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் வீட்டுக்கு செல்லவில்லை. அவர் எங்கு சென்றார்?, என்ன ஆனார்? என்று தெரியவில்லை. அவரை உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி சந்திரா வேதாரண்யம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டா் சுப்ரியா, சப்-இன்ஸ்பெக்டா் தமிழ்செல்வன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான காசிநாதனை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்