.வேன் மோதி முதியவர் பலி
கொட்டாரம் அருகே வேன் மோதி முதியவர் பலியானார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி
கொட்டாரம் அருகே வேன் மோதி முதியவர் பலியானார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
முதியவர்
வெள்ளிச்சந்தை அருகே உள்ள கல்படியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது70), ஓய்வு பெற்ற கல்லூரி ஊழியர். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அருணாசலத்தின் ஒரு மகளின் கணவர் உடல்நலம் சரியில்லாமல் கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரைபாரப்பதற்காக அருணாசலம் சென்றுள்ளார். மருமகனை பார்த்து விட்டு அவர் வீட்டிற்கு செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
வேன் மோதி சாவு
அப்போது கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு சிபின் (வயது 22) என்பவர் ஓட்டி வந்த சுற்றுலா வேன் அருணாசலம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அருணாசலம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வேன் டிைரவர் சிபினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.