ரெயில் மோதி முதியவர் பலி

குழித்துறையில் ரெயில் மோதி முதியவர் பலி

Update: 2023-05-23 20:23 GMT

நாகா்கோவில், 

குழித்துறை ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் நேற்றுமுன்தினம் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பிணமாக கிடந்தவர் களியக்காவிளை கீழ் புத்தன்வீடு பகுதியை சேர்ந்த ராமையன் (வயது 83) என்பதும், குழித்துறை ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் கண்ணிமைக்கும் நேரத்தில் ராமையன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்