ரெயில் மோதி முதியவர் பலி

ரெயில் மோதி முதியவர் உயிரிழந்தார்.

Update: 2022-09-19 20:20 GMT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்திற்கும் டவுன் ரெயில் நிலையத்திற்கும் இடையே திருவானைக்காவல் பாலத்தின் கீழ் உள்ள ரெயில்வே தண்டவாளப் பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது பற்றி திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முதியவர் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த முதியவர் இளஞ்சிவப்பு நிற சட்டையும், காவி நிற வேட்டியும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது குறித்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்