மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

செம்பனார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Update: 2022-10-26 18:45 GMT

திருக்கடையூர்:

செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது64). இவர் நேற்று முன்தினம் செம்பனார்கோவில் கடைவீதியில் பால் வாங்கிக் கொண்டு நடந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பூம்புகாரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி நெடுமருதூர் நடுத்தெருவை சேர்ந்த கேசவன் மகன் பிரேம்குமார், கோடங்குடி காமராஜ் நகரை சேர்ந்த கணேசன் மகன் புவனேஸ்வரன் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள், செல்வராஜ் மீது மோதியது. இதில் செல்வராஜ் பலத்த காயம் அடைந்தார். இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் இறந்தார். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

Tags:    

மேலும் செய்திகள்