மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
தோகைமலை அருகே உள்ள பழைய கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிமுத்து(வயது 65). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் புதுகல்லுப்பட்டி பிரிவு சாலை அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக நல்லகவுண்டன்பட்டியை சேர்ந்த நந்தகுமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பழனிமுத்து மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பழனிமுத்துவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பழனிமுத்துவின் மகன் இளங்கோவன் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.