மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
மார்த்தாண்டம் அருகே உள்ள பம்மம் சிறிய காட்டுவிளையை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 61). இவர் பம்மம் பகுதியில் உள்ள ஒரு கார் வாங்கி விற்பனை செய்யும் நிறுவனத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் பரமேஸ்வரன் நேற்று காலையில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது மார்த்தாண்டம்-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் பரமேஸ்வரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பரமேஸ்வரனின் மகன் விஜு மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.