மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-22 14:39 GMT

மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 73). இவர், நத்தம் கோவில்பட்டி பகுதியில் உள்ள விறகு கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நத்தம் புளிக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது நத்தம் கோவில்பட்டியை சேர்ந்த தியாகு என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ராஜூ மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜூ பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்