மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பலி

செங்கம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2022-09-04 16:40 GMT

செங்கம்

செங்கம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். 

செங்கம் அருகே உள்ள நரசிங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 65). இவர் செங்கம் அடுத்துள்ள புதூர்மாரியம்மன் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது புதூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (48) என்பவர் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்தபோது ராமலிங்கம் வந்த இரு சக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ராமலிங்கம் படுகாயம் அடைந்து கீழே விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் உயிரிழந்தார். இது குறித்து புதுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்