கோபால்பட்டியில் கார் மோதி முதியவர் பலி
கோபால்பட்டியில் கார் மோதி முதியவர் பலியானார்.
கோபால்பட்டி இந்திராநகரை சேர்ந்தவர் சின்னையா (வயது 70). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர், கோபால்பட்டியில் திண்டுக்கல்-நத்தம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக திண்டுக்கல்லில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற கார் ஒன்று சின்னையா மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட சின்னையா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சின்னையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.