கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் ஆறுமுகம்(வயது 60) என்பவர் கடந்த ஒரு வருடமாக தங்கி இருந்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் சம்பவத்தன்று நீலமங்கலம் கூட்டு ரோடு அருகில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.