நாகை கடுவையாற்றில் முதியவர் பிணம்
நாகை கடுவையாற்றில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது பறறி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகை கடுவையாற்றில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது பறறி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதியவர் பிணம்
நாகை கீச்சாங்குப்பம் கடுவையாற்றில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து மீனவர்கள் நாகை டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மீன் ஏலம் விடும் தொழில்
விசாரணையில் கடுவையாற்றில் பிணமாக கிடந்தது நாகை அருகே உள்ள பொரவாச்சேரியை சேர்ந்த ஹமீது (வயது65) என்பதும், அவர் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில், மீன் ஏலம் விடும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.
ஹமீது கடுவையாற்றில் மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.