அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழக்கவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கலியன் (வயது 65). இவர் அருகே உள்ள குந்தபுரம் கிராமத்தில் உள்ள குளத்தில் நண்டு, நத்தைகளை பிடிக்க நீரில் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கலியன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.