ஊருணியில் மூழ்கி முதியவர் சாவு
திருவாடானை அருகே ஊருணியில் மூழ்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
தொண்டி,
திருவாடானை தாலுகா டி.நாகனி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 81). மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் இவர் சம்பவத்தன்று இளங்குன்றம் கிராமத்தில் உள்ள ஊருணியில் இறங்கி உள்ளார்.அப்போது தண்ணீரில் மூழ்கிய கோவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருவாடானை போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருவாடானை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.