முதியவர் மர்ம சாவு

சிவகாசி அருகே முதியவர் மா்மமான முறையில் இறந்தார்.

Update: 2023-02-14 20:03 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள வடமலாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சோலைராஜன் (வயது73). இவர் மனைவியுடன் அதே பகுதியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அதே பகுதியில் வசித்து வரும் மகன் ஜெனார்த்தனனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தேடிய போது வடமலாபுரம் சுடுகாட்டு பகுதியில் ஆற்றுகிடங்கில் மர்மமான முறையில் பிணமாக அவர் கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் ஜெனார்த்தனன் திருத்தங்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார், சோலைராஜனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்