வாய்க்காலில் தவறி விழுந்த முதியவர் சாவு
கருங்கல் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த முதியவர் சாவு
கருங்கல்,
கருங்கல் அருகே உள்ள கப்பியறை தட்டான் பறம்புக்கரை பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 65), தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் மது குடித்து விட்டு மத்திக்கோடு பாலத்தில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி வாய்க்காலில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மறுநாள் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து இதுபற்றி கருங்கல் போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அய்யப்பனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அய்யப்பனின் மனைவி ராஜகுமாரி கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.