நாகா்கோவில்:
நாகர்கோவில் தேரேகால்புதூர் புதுகிராமம் அருகே உள்ள தண்டவாள பகுதியில் நேற்று காலை முதியவர் ஒருவர் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பிணமாக கிடந்தவர் புதுக்கிராமம் பகுதியை சேர்ந்த ஜான்சன் (வயது 71) என்பதும், அவர் அந்த பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.