மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழந்தார்.

Update: 2023-03-31 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூர் வையாழிகாடு பகுதியை சேர்ந்தவர் முருகையன் (வயது86). இவர் வேதாரண்யத்தில் உள்ள ஒரு கடையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மாலை வேதாரண்யம் வந்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பூப்பட்டி அருகே சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், அவர் மீது மோதியது. இதில் முருகையனின் வலது கால் தூண்டாகியது.உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகையன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பசுபதி, சப்- இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த முருகையனுக்கு மனைவி, 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்