மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழந்தார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலவரப்பங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(வயது 65). இவர் சம்பவத்தன்று வெற்றிலை பாக்கு வாங்குவதற்காக சாலையோரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது தேளூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(29) ஓட்டி வந்த ேமாட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் நடந்து சென்ற பெருமாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.