மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் சாவு
மயிலாடுதுறையில் மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் சாவு வாலிபர் கைது செய்யப்பட்டார்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா கீரனூர்- கூத்தனூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 68). இவர் தனது உறவினரான மயிலாடுதுறை சேர்ந்தங்குடி வடபாதி தெருவை சேர்ந்த செந்தில் (42) என்பவர் வீட்டில் கடந்த 10 நாட்களாக விருந்தாளியாக வந்து தங்கினார். நேற்றுமுன்தினம் இரவு பன்னீர்செல்வம் வெற்றிலை, பாக்கு வாங்குவதற்காக அருகில் சீர்காழி மெயின் ரோட்டில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்றார். அப்போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பன்னீ்செல்வத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பன்னீர்செல்வம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உளுத்துக்குப்பை செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் ரங்கநாதன் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.