நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-07-28 20:30 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார். 

நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 84). இவர் நேற்றுமுன்தினம் வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக கோணம் பகுதியை சேர்ந்த வினிஸ் (25) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராதவிதமாக அந்த மோட்டார் சைக்கிள் சுப்பிரமணியன் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்