மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

அம்மாப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-24 18:45 GMT

அம்மாப்பேட்டை:

அம்மாப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

மோட்டார் சைக்கிள் மோதியது

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள கீழ கோவில்பத்து, மேல ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது70). இவர் சம்பவத்தன்று காலை தனது வயலுக்கு சென்று விட்டு தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையில் ஓரம் நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது கீழகோவில்பத்து, அம்பலக்கார தெருவை சேர்ந்த செல்வம் மகன் குமார் (28) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ராஜலிங்கத்தின் பின்புறம் மோதியது. இதில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த ராஜலிங்கம் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி சாவு

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராஜலிங்கத்தின் மகன் குமார் (51) கொடுத்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகார் சோழன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்