மொபட் மோதி முதியவர் சாவு

பெண்ணாடத்தில் மொபட் மோதி முதியவர் பலியானார்.

Update: 2022-09-17 18:45 GMT

பெண்ணாடம், 

பெண்ணாடம் அடுத்த இறையூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நந்தகோபாலன் (வயது 80). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். இதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் நடந்து சென்ற போது, அவருக்கு பின்னால் வந்த மொபட் நந்தகோபாலன் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த நந்தகோபாலனை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நந்தகோபாலன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்