திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள கோழிப்புலியூர் கூட்ரோடு மேலதாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 68). இவர், அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த லாரி திடீரென அவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேத்துப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராகவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.