கீழையூர் அருகே திருமணங்குடி மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது65). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு அங்கு உள்ள கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு சைக்கிளில் கிழக்கு கடற்கரைச் சாலையை கடக்க முயன்ற போது வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற கார் திடீரென கோவிந்தசாமி சென்ற சைக்கிள் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கோவிந்தசாமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.