கட்டிலில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

கட்டிலில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

Update: 2023-05-10 20:46 GMT

பாபநாசம்;

பாபநாசம் அருகே பண்டாரவாடை மேல தெருவை சேர்ந்தவர் பாரூக்தீன்(வயது64). இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வலது காலை அறுவை சிகிச்சை மூலம் இழந்தவர். இந்த நிலையில் வீட்டில் கட்டிலில் படுத்திருந்த போது பாரூக்தீன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாரூக்தீன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது மகன் சேக் உசேன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்