வழி தவறி சென்ற முதியவர் சாவு
அய்யம்பேட்டை அருகே வழி தவறி சென்ற முதியவர் உயிரிழந்தார்.
அய்யம்பேட்டை;
அய்யம்பேட்டை அருகே சூலமங்கலம் ெரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் முதியவர் ஒருவர் இறந்த நிலையில் ஒரு கட்டிடத்தின் சுவற்றில் சாய்ந்திருந்தார். இது குறித்து தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் பசுபதி கோவில் கண்டியூர் மெயின் ரோட்டை சேர்ந்த முனியப்பன் (வயது 85) என்றும் சற்று மனநிலை சரியில்லாத இவர் வழி தவறி சென்று வயது முதிர்வின் காரணமாக இறந்ததும் தெரிய வந்தது. இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.