காவேரிப்பட்டணம்:-
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே கூரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனகோட்டி (வயது 65). இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மன வேதனை அடைந்த அவர், உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.