முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

மார்த்தாண்டம் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-14 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மார்த்தாண்டம் அருகே உள்ள ஞாறான்விளை சங்கரம்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துநாயகம் (வயது 85). இவர் கடந்த சில வருடங்களாக குடும்பத்தினரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். முத்துநாயகம் அருகில் உள்ள சந்திரா என்பவரின் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இதனால் அந்த தோட்டத்தில் உள்ள ஒரு அறையில் தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக முத்துநாயகத்தின் நடமாட்டம் இல்லாமல் இருந்து வந்தது. இதனால் நேற்று முன்தினம் காலையில் முத்துநாயகம் தங்கியிருந்த அறைக்கு அவரது மகன் ஜேம்ஸ் (51) சென்று பார்த்த போது துர்நாற்றம் வீசியது. அதை தொடர்ந்து ஜன்னலை திறந்து பார்த்த போது முத்துநாயகம் தூக்கில் அழுகிய நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதுகுறித்து ஜேம்ஸ் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முத்துநாயகத்தின் உடலை கைப்பற்றி பிேரத பரிேசாதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்