தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்துகொண்டார்

Update: 2023-07-04 19:09 GMT

வத்திராயிருப்பு

வத்திராயிருப்பு அருகே கோபாலபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 65). இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். சஞ்சீவி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மேலகோபாலபுரத்தில் உள்ள செங்கல் சூளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்