நாகர்கோவிலில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
நாகர்கோவிலில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில் கீழபெருவிளை இந்திரா தெருவை சேர்ந்தவர் கருத்துடையான் (வயது 90). இவர், தனது மகன் தர்மராஜின் பராமரிப்பில் இருந்து வந்தார். கருத்துடையான் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கருத்துடையான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த ஆசாரிபள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.