ஆற்றில் முதியவர் பிணம்

சுவாமிமலை அருகே ஆற்றில் முதியவர் பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-06-24 20:29 GMT

கபிஸ்தலம்;

சுவாமிமலை அருகே உள்ள தேவனாஞ்சேரி ஊராட்சியில் மண்ணியாற்றின் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உடல் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த சுவாமிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. முதியவர் உடலை சுவாமிமலை போலீசார் கைப்பற்றி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்