பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-24 18:25 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் புகையிலைக்கார தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன். இவருடைய மனைவி கஸ்தூரி (வயது 22). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் தனபால் (60) என்பவருக்கும் நிலப்பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தனபால் கஸ்தூரியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கஸ்தூரி அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்