முதியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
ஆத்தூர் அருகே விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த முதியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆத்தூர்
ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடி காட்டு கொட்டகை பகுதியை சேர்ந்தவர்கள் அழகேசன் (வயது 41). கிருஷ்ணசாமி (71). விவசாயிகளான இவர்கள் இருவருக்கும் இடையே பணம்-கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்தது. இந்த நிலையில் கடந்த 23.9.2017 அன்று, கிருஷ்ணசாமி தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக கிருஷ்ணசாமி மீது ஆத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஆத்தூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிவில் ேநற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட, கிருஷ்ணசாமிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பு கூறினார்.