சாலை விபத்தில் மூதாட்டி பலி

சாலை விபத்தில் மூதாட்டி பலியானார்.

Update: 2023-07-24 18:46 GMT

தரகம்பட்டி அருகே உள்ள மாலப்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி பிச்சையம்மாள் (வயது 60). இவர் நேற்று முன்தினம் வீரணம்பட்டி பகுதியில் நடந்து வரும் 100 நாள் வேலைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக பாளையம்-திருச்சி மெயின் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பிச்சையம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த பிச்சையம்மாள் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்