மின்னல் தாக்கி மூதாட்டி பலி

மின்னல் தாக்கி மூதாட்டி பலியானார்.

Update: 2022-11-09 18:40 GMT

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்பவரின் மனைவி மணிமேகலை(வயது 62). நேற்று மாலை இப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மணிமேகலை வயலில் நடவு வேலை செய்து கொண்டிருந்தார். இதில் எதிர்பாராத விதமாக அவர் மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமானூர் போலீசார் மணிமேகலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்