விபத்தில் மூதாட்டி சாவு

விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார்.

Update: 2023-07-04 19:41 GMT

கோடாலி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையன் மனைவி அம்பிகை(வயது 85). இவர் கடந்த 3-ந் தேதி மதியம் வீட்டில் இருந்து டீ கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் சங்கர் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அம்பிகை மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அம்பிகையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அம்பிகை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்