மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.

Update: 2023-09-11 20:23 GMT

சூரமங்கலம்;-

இரும்பாலை அருகே அழகுசமுத்திரம் ஏரிக்கோடி பகுதியை சேர்ந்தவர் இருசம்மாள் (வயது 63), இவர் தனது பேரன் மனோகரனுடன் மோட்டார் சைக்கிளில் ராசிபுரத்தில் உள்ள தனது மகளை பார்க்க சென்றார், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் தனது பேரனுடன் நேற்று இரும்பாலை ரோடு சோளம்பள்ளம் அருகே வந்துள்ளார். அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் மோதி இருசம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் விரைந்து வந்து இருசம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்