பட்டுக்கோட்டையை அடுத்த செம்பாளூர் கிராமத்தைச்சேர்ந்தவர் நீதி ராஜன் (வயது 63). விவசாயி. இவரது மனைவி சமரசம் (60). நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் சமரசம் செம்பாளூர் மெயின் ரோட்டில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சமரசம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமரசத்தின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.