ரெயிலில் மூதாட்டி பிணம்

நாகர்கோவில் ரெயிலில் மூதாட்டி பிணம் யார் அவர்? போலீசார்

Update: 2022-10-01 20:57 GMT

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் இருந்து விசாகப்பட்டினம் வழியாக கொல்கத்தா சாலிமார் வரை செல்லும் சாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயில் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 6 மணிக்கு புறப்படும். அதன்படி நேற்று காலை சாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் சுமார் 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் மயங்கி கிடப்பதை ரெயில்வே ஊழியர்கள் கண்டனர்.

உடனே இதுபற்றி ரெயில்வே டாக்டர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த டாக்டா்கள் அவரை பரிசோதித்தபோது, மூதாட்டி ஏற்கனவே இறந்து கிடந்தது தெரியவந்தது. இதற்கிடையே அங்கு வந்த ரெயில்வே போலீசார் மூதாட்டியின் உடமைகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அவரிடம் ஒரு செல்போன் இருந்தது. அதில் உள்ள எண்களை போலீசார் தொடர்பு கொண்டபோது, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நபர்கள் எதிர்முனையில் பேசினர். ஆனாலும் மூதாட்டி பற்றி அவர்களுக்கு தெரியாது என கூறினார். இதனால் இறந்து கிடந்த மூதாட்டி யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்