வேப்பனப்பள்ளி பகுதிகளில் வெண்டைக்காய் விலை அதிகரிப்பு ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளி பகுதிகளில் வெண்டைக்காய் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெண்டைக்காய் வீழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி முள்ளங்கி, முட்டைக்கோஸ், வெண்டைக்காய், கொத்தமல்லி, புதினா மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தக்காளி, வெண்டைக்காய் மற்றும் காய்கறிகள் விலை கிடுகிடுவென அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஒரு மாதமாக வேப்பனப்பள்ளி பகுதிகளில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பால் மார்க்கெட் மற்றும் வாரச்சந்தைகளில் வரத்து அதிகரித்தது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
விலை அதிகரிப்பு
இந்த நிலையில் நேற்று மார்க்கெட் மற்றும் வாரச்சந்தைகளுக்கு வெண்டைக்காய் வரத்து குறைந்ததால் அதன் விலை அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் வேப்பனப்பள்ளி பகுதியில் உள்ள மார்க்கெட் மற்றும் சந்தைகளுக்கு வரத்து குறைந்ததால் வெண்டைக்காய் விலை அதிகரித்துள்ளது என்று கூறினர்.