கெட்டுபோன உணவு பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை வியாபாரிகளுக்கு, அதிகாரி எச்சரிக்கை

கெட்டுபோன உணவு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் பி.கே.கைலாஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-06-10 18:45 GMT

பெண்ணாடம், 

பெண்ணாடத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து வணிகர் சங்க வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் பி.கே.கைலாஷ் குமார் தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நல்லதம்பி, சுப்பிரமணியன், சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் பி.கே.கைலாஷ் குமார் கூறுகையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை கண்டிப்பாக விற்பனை செய்யக்கூடாது. அதே போல் கெட்டுபோன உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. கடைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும்.

நடவடிக்கை

காலவதியான உணவு பொருட்களை விற்பனை செய்யாமல் உடனே அழிக்க வேண்டும். உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கலர் பொடியை பயன்படுத்தி உணவு பொருட்களை தயார் செய்யக்கூடாது. அதே போல் கெட்டுபோன எண்ணெயில் உணவு தயாரிக்கக்கூடாது. இதை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். .இதில் பெண்ணாடம் நகர பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்