பெண் ஊழியர்களை உள்ளே வைத்து பேக்கரியை சீல் வைத்த அதிகாரிகள்
அருப்புக்கோட்டையில் பெண் ஊழியர்களை உள்ளே வைத்து பேக்கரியை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் பேக்கரி கடைக்காக ரூ.2 லட்சம் நகராட்சிக்கு வரி பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தும் சம்பந்தப்பட்டவர்கள் சொத்து வரி கட்டவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று நகராட்சி ஊழியர்கள் திடீரென வந்து பேக்கரி கடை பணியாளர்கள் உள்ளே இருக்கும் போதே சீல் வைத்து சென்றனர். இதனால் கடையின் உள்ளே இருந்த பெண் ஊழியர்கள் பதற்றம் அடைந்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதை அறிந்த நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து கட்டிடத்தின் சீலை அகற்றினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.