வள்ளியூர் மீன் சந்தையில் அதிகாரிகள் திடீர் சோதனை; தரமற்ற மீன்கள், பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
மீன் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் வள்ளியூர் மீன் சந்தையில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில் தரமற்ற மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த வியாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் இந்த சோதனையின் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.