ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

புதுக்கோட்டையில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

Update: 2023-09-19 18:24 GMT

அதிரடி சோதனை

நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் இறந்த சம்பவத்தை தொடா்ந்து புதுக்கோட்டையில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரவீன்குமார் தலைமையில் அதிகாரிகள் நகரப்பகுதியில் புதிய பஸ் நிலையம் அருகே, பழைய பஸ் நிலையம், அண்ணா சிலை அருகே, டி.வி.எஸ். கார்னர் அருகே உள்ளிட்ட இடங்களில் உள்ள அசைவ ஓட்டல்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில் சமையல் செய்யும் இடம் மற்றும் கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். மேலும் சிக்கன்களை தயார் செய்து வைத்திருந்ததையும் பார்த்தனர். மேலும் சவர்மா கடைகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சாலையோர கடைகளிலும் சோதனையிட்டனர்.

கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

இந்த சோதனையின் போது கெட்டுப்போன சிக்கன்கள் பயன்படுத்தப்பட்டதை கண்டறிந்தனர். இதில் சுமார் 30 கிலோ சிக்கன்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார். மேலும் அதனை பினாயில் மற்றும் ஆசிட் ஊற்றி அழித்தனர்.

இதேபோல சவர்மா கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். சாலையோரம் வைத்து சவர்மா விற்பனை செய்யக்கூடாது என எச்சரித்தனர். ஒரு ஓட்டலுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தொிவித்தனர். மாவட்டம் முழுவதும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றனர். இந்த சோதனையின் போது நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்களும் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்