தற்காலிக பஸ் நிலையம் அமையும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு
அருப்புக்கோட்டையில் தற்காலிக பஸ்நிலையம் அமையும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் தற்காலிக பஸ்நிலையம் அமையும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தற்காலிக பஸ் நிலையம்
அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் முழுவதும் இடிக்கப்பட்டு ரூ.8 கோடி மதிப்பில் ஸ்மார்ட் பஸ் நிலையமாக மாற்றப்பட உள்ளது. அதற்கான பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது. இந்தநிலையில் புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்கும் வரை அதன் அருகிலேயே தற்காலிக பஸ் நிலையம் செயல்பட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த தற்காலிக பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பஸ் உள்ளே செல்லும் வழியையும், பஸ் எங்கு நிற்கும் என்பது குறித்தும், பஸ் வெளியே செல்லும் வழிகள் குறித்தும் உள்ளே அமைய உள்ள கடைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
இந்த ஆய்வில் வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் ரவீந்திரன், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர் மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி, தி.மு.க. நகர செயலாளர் மணி, அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகள், நகராட்சி பொறியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.