திருமண மண்டபம் கட்டுமான பணியை அதிகாரிகள் ஆய்வு
படவேடு ரேணுகாம்பாள் கோவில் திருமண மண்டபம் கட்டுமான பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் கமண்டல நதி முருகர் கோவில் மலையடிவாரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் திருமண மண்டபம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை இன்று இந்து சமய அறநிலையத்துறை உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது செயல் அலுவலர் சிவஞானம், கோவில் மேலாளர் மகாதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.