தரிசு நிலத்தை அதிகாரிகள் ஆய்வு
கே.வி.குப்பம் பகுதியில் தரிசு நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வநாதன், வேளாண்மை துணை இயக்குனர் வெங்கடேசன், தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் லட்சுமிபிரியா, வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், தாசில்தார் கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர் த.கல்பனா, செயற்பொறியாளர் ஸ்ரீதர், உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் ஆகியோர் வடுகந்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியர் குடியிருப்பு, பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டனர். கே.வி.குப்பம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தபோது 2020-ம் ஆண்டு வாங்கி வைத்திருந்த அனைத்து அறிவியல் உபகரணங்களும் பிரிக்கப்படாமல் அப்படியே கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அறிவியல் உபகரணங்களை முறையாக பயன்படுத்த அறிவுரை வழங்கினர்.
நாகல் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், தரிசு நிலத்தை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினர். வாழ்வாங்குன்றத்தில் உள்ள எந்திரங்கள் வாடகை மையத்திற்கு இரண்டு சுழல் கலப்பை, 3 டிராக்டர் ஆகியவை ரூ.10 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டிருந்ததை பார்வையிட்டு, அவை முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா? என்பதைக் கேட்டறிந்தனர்.